Archive for the ‘tamil’ category

பழைய காகிதக்கற்றைகளிலிருந்து

March 17, 2009

கண்களை மூடி, (மூடாமலும்)

தூங்கி எழுந்தால், காலை தொடரும் நாடகம்.

காட்சிக்குக்காட்சி மட்டுமின்றி, மனம் பாத்திரங்களுக்காகவும் ஒப்பனை ஏற்கும்.

வாய் சிரிக்கும்,சப்திக்கும்;உடல் நடிக்கும்.

மனம் மட்டும் எங்கோ உலா போகும்; உலவி வருகையில் சிரிக்கும், சப்திக்கும்.


மீண்டும் சூழல் தெரியும், நாடகம் தொடரும்.மனம், மீண்டுமின்னொருமுறை உலா போகும். அந்த நந்தவனத்தில் தன்னையே தேடும்.தானே தன்னைத் தேடித்தேடி அலைபாயும், தோற்கும்.

தரிசனம் பெற ஒரு கண்ணாடி உருவாக்கும்.நிஜம் அந்நியமான ஒரு பொய் என்றாலும் அங்கீகரிக்கும்.

நாகரிகமாய் நடக்கும் இந்த‌ யக்ஞ‌நாடகம் நிமிடநாசம் பெறும்.

மீண்டும் சூழல் தெரியும், நாடகம் தொடரும்.மனம் இன்னொருமுறை உலா போகும். அந்த நந்தவனத்தில் தன்னைத் தேடும்.
மீண்டும் தானே தன்னையே, தேடித்தேடி அலைபாயும், தோற்கும்.

தரிசனம் பெற ஒரு கண்ணாடி உருவாக்கும். நிஜம் அந்நியமான ஒரு பொய் என்றாலும் அங்கீகரிக்கும்.

இது 1996ல் எழுதியது.பத்தாண்டுகளுக்கு ஒரு பக்கம் என்று இதுவரை மூன்று பக்கங்களைத் தேர்ந்தெடுத்து
பதிவு
செய்தபோது எனக்கே இவை
அந்நியமாக‌ப்படுகின்றன.

அந்நியமாகுமா அந்தரங்கம்?

பகிரங்க‌மாகலாம், சில வேளை பரிகாசமாகவும் ஆகலாம். ஆனால் பிரத்யேகம் எப்படி ஒரு பொதுப்பார்வைக்கு உட்படலாம்?

கவிதைகள் உற்பத்தி செய்ய‌ப்படுவதில்லை,

அவை தாமே உருவாகுபவைதான் என்றாலும்,

தன் மனக்கண்ணுக்கும், அகக்கண்ணுக்கும் மட்டுமே

சொந்தமானதாய் வந்துதித்த சிந்தனகளை

பிற கண்களுக்காகப் பரப்பி வைக்கும் போது,

வலிக்கும்- எல்லா கைதட்டல்களையும் மீறி.

எங்கேயோ கைதட்டல்கள் வலிகளை மறக்கடிக்கத்தான் செய்கின்றன. இத்தனைக்கும், வலிகள் மட்டுமே வடுக்களைத் தந்துவிட்டுப்போகின்றன, கைதட்டல்கள் குமிழிகள்போல் சீக்கிரம் காணாமல் போய் விடுகின்றன.

ஆனாலும் மனம், தற்காலிகத்தையே காதலிக்கிறது.

காதல் தற்காலிகமாகாதவரை, சுகமே நிகழ்கனவு.


பொய்தான் சுவை.

தெரிந்து போடும் நாடக வேடமே வெற்றி.

விலகல் வேடிக்கை பார்த்தல் எல்லாம்

ஆசுவாசப்பட‌ மட்டுமே,

நாடகம் முழுநேரமும்.


ஒப்பனைக்கான கைத்தட்டல்கள்

நிலைக்கண்ணாடிகளை நொறுக்க‌

கோணலாகும் நிஜங்கள்

புது நிஜங்கள், புதுப்புது பொய்களுக்காக.

பொய்தான் சுவை.

தெரிந்து போடும் நாடக வேடமே வெற்றி.

விலகல் வேடிக்கை பார்த்தல் எல்லாம்

ஆசுவாசப்பட மட்டுமே,

நாடகம் முழுநேரமும்.

ஒப்பனைக்கான கைத்தட்டல்கள்

நிலைக்கண்ணாடிகளை நொறுக்க‌

கோணலாகும் நிஜங்கள்

புது நிஜங்கள், புதுப்புது பொய்களுக்காக;

கனவே ஒப்பனைச்சாந்து.

i have tried to write in tamil following repeated instructions(not requests) by many.

all these are experiments in rudhrantamil.blogspot.com

let me know how to go on